nn

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை ஐ.எம்.எக்ஸ் விளக்கு பின்புறத்தில், தைப்பூசத்தை ஒட்டி தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனால் பெண்கள் அங்கு குவிந்தனர்.

Advertisment

ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர். இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற முயன்றபோது நெரிசலில் சிக்கி ராசாத்தி, வள்ளியம்மா, சின்னம்மா, நாகம்மா ஆகிய 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 10 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்திலிருந்த திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.

Advertisment

பிப்ரவரி 5 ஆம் தேதி காலை இறந்த 4 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இறந்த குடும்பத்தினருக்கு தலா 25 ஆயிரம் நிதி தனது சொந்த பணத்தில் இருந்து உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உட்பட கட்சியினர் உடன் இருந்தனர்.

இறந்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக இறந்தவர் குடும்பத்துக்கு தலா 2 லட்சமும், அடிப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரமும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.