Published on 09/04/2022 | Edited on 09/04/2022

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு நான்காயிரம் டன் நிலக்கரி வந்துள்ளது. நிலக்கரி வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகள் எண்ணிக்கை 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1, 4 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் 2,3,5 யூனிட்டுகளில் தொடர்ந்து மின்சார உற்பத்தி பாதிப்படைந்து. இந்நிலையில் நிலக்கரி வருகை அதிக மின் உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது.