கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் பகுதிகளில் சாராயம் விற்பனை நடக்கின்றதுஎன்று வந்ததகவலையடுத்து, அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் காவல்துறையினர், அண்ணாமலை நகர் மற்றும் சி. கொத்தங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சி கொத்தங்குடி பகுதியைச் சேர்ந்த, அந்தோணிசாமி மகன் சார்லஸ்(28), பாலு என்பவரது மகன் விக்னேஷ்(27), சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த, தமிழன்பன் மகன் மோகன்ராஜ்( 28), குமரன் தெருவைசேர்ந்த, முருகானந்தம் மகன் மணிகண்டன் (27) ஆகிய 4 பேரும் 220 லிட்டர் சாராயத்தை வைத்து விற்பனை செய்ததாக காவல்துறையினர் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதில் மணிகண்டன் என்பவர் தனியார் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.