திருச்சி மாவட்டத்தில் தொடர் தடுப்பூசி முகாம்கள், சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இந்நிலையில், திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவலர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், பொதுமக்கள் காவல் நிலையத்துக்குள் வர முடியாதபடி காவல் நிலையம் முன்பு நாற்காலிகள் மூலம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களோடு பணிபுரிந்த சில காவலர்கள் தற்போது பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.