கோப்புப்படம்
வீட்டில் மின் சாதனப் பொருட்கள் கருகியதால் உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள துர்கா நகர் பகுதியில் திடீர் உயர் மின்னழுத்தம் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின் சாதனப் பொருட்கள் சேதமானது. இந்நிலையில் மின் சாதனப் பொருட்கள் கருகியதில் ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட நான்கு பேருக்கும் சிறிய அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.