kl

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை முழுவதும் அநேக இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வரின் உத்தரவை அடுத்து சென்னை முழுவதும் அனைத்து வார்டுகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமுதா, கார்த்திகேயன், கோபால், பங்கஜ் குமார் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

Advertisment