Advertisment

வாடகை வீட்டில் பாலியல் தொழில்; சுற்றிவளைத்த போலீஸ்!

4 people were arrested for doing illegal business with women

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக உளுந்தூர்பேட்டை போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை(18.8.2024) மாலை அந்த வீட்டை காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர். அப்பொழுது அந்த வீட்டில் இருந்து 4 பெண்கள் 2 ஆண்கள் என 6 பேர் வெளியே வந்தனர்.

அப்பொழுது அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் 6 பேரையும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கல்பனா என்ற பெண் விழுப்புரம் வண்டி மேடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற இடைத்தரகர் மூலம் இரண்டு இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் அதற்காக திருக்கோவிலூரைச் சேர்ந்த சுதாகர் மற்றும் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த மாதவன் ஆகியோர் வந்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கல்பனா, பாத்திமா, சுதாகர், மாதவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் தொழில் நடந்த வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட 2 இளம் பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Women arrested kallakurichi police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe