Advertisment

நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் மகேந்திரன் (37) அவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு சக்திவேல் (7) என்ற மகனும் அக்ஷிதா (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. மகேந்திரன் தனது மனைவி குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக வந்துள்ளார்.

Advertisment

இதனிடையே மகேந்திரன் அங்கு அருகில் உள்ள காரையார் மலைப்பகுதியில் தனது மஞ்சள் காமாலை நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. மகேந்திரனின் மாமனார் ஏற்கனவே இதறந்துவிட்டார். அவரது மாமியார் மட்டுமே வி.கேபுரத்தில் உள்ளார். அந்த வீட்டில் தான் கடந்த 15 நாட்களாக மகேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் வி.கே.புரத்தின் ஒரு பகுதியான மேல்சிவந்திபுரத்தில் உள்ள அலங்காரியம்மன் கோயில் கொடை என்பதால் நேற்று வரை அங்கு தங்கியுள்ளார். நேற்று இரவு கோயில் கொடையின் போது சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். பின்னர் மகேந்திரன் தம்பதியும் குழந்தைகளும் இரவு வழக்கம் போல் படுத்துள்ளனர். ஆனால் இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்த மகேந்திரனின் மாமியார் அவர்களை பார்த்த போது 4 பேரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இந்த தகவலறிந்த வி.கே.புரம் போலீசார் காலை 7 மணி அளவில் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 4 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என எதுவும் தெரியவில்லை. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe