
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள ஓலப்பாளையத்தைச் சேர்ந்த சிலர் கொடுமுடி கோவிலுக்கு திதி கொடுப்பதற்காக சென்றிருந்தனர். சரக்கு வாகனத்தில் 30க்கும் மேற்பட்டோர் சென்றிருந்த நிலையில் மீண்டும் ஓலப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு வேன் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் சரக்கு வேன் தலைகுப்புற விழுந்தது. இதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பூங்கொடி, கிட்டுசாமி, தமிழரசி, சரோஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வெள்ளகோவில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)