Advertisment

எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுகொன்ற வழக்கில் 4 பேரிடம் விசாரணை... ஒருவர் சிக்கியதாக தகவல்?

களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானாா்கள். இவா்களின் புகைப்படத்தை வெளியிட்டு கேரளா தமிழ்நாடு போலீசாா் இணைந்து தேடி வந்தனா்.

Advertisment

இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா கொல்லம் மாவட்டம் தென்மலையில் வைத்து கேரளா மற்றும் தமிழக கியூ பிாிவு போலீசாா் சந்தேகபடும் வகையில் வந்த ஒரு வாகனத்தை மடக்கி அதில் இருந்த 4 பேரை பிடித்துள்ளனா். இதில் ஒருவா் வில்சனை துப்பாக்கியால் சுட்ட இரண்டு போில் ஒருவா் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனா்.

Advertisment

 4 people investigated ... someone reported being trapped?

பயங்கரவாதிகளாக கருதப்படும்அப்துல் சமீமும், தவ்பீக்கும் எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டு கொலை செய்து விட்டு கேரளாவில் நெய்யாற்றின்கரைக்குஅவா்கள் சென்றுஸ்காா்பியோ வாகனத்தில் இருந்து இறங்கியதைஅடுத்து டி.என். 22 சி.கே. 1377 என்ற வாகனத்தில் ஏறி சென்று இருக்கிறாா்கள். இன்று மதியம் அந்த வாகனத்தில் 4 போ் இருந்து இருக்கிறாா்கள். அவா்கள் தென்மலையில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு தென்மலைக்கும், ஆாியங்காவுக்கும் இடையில் காட்டு பகுதியில் உள்ள கழுதுருட்டி அருவியில் குளித்து விட்டு வரும் போது இதையெல்லாம் கண்காணித்த போலீசாா் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கமும் டாரஸ் லாரியை குறுக்கே நிறுத்திஅந்த வாகனத்தில் இருந்த 6 பேரை பிடித்துள்ளனா்.

அவா்கள் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சோ்ந்தவா்கள் என கூறியதால் போலீசாா் ரகசிய இடத்தில் வைத்து விசாாித்து வருகின்றனா். அதில் ஒருவா் வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாா் விசாாித்து வருகின்றனா். இவா்கள் இந்த வழக்கில் தொடா்புடையவா்களா? என போலீஸ் விசாரணையில் தொியவரும். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

arrest Kanyakumari police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe