4 people, including a woman, were arrested for selling lottery tickets

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால்தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதைப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர்ஸ்ரீ ரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Advertisment

அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம்ஆத்தூர்முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி (50), ஈரோடு விநாயகர் கோவில் தெருமூலப்பாளையம் பகுதி சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானிகேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகரைச் சேர்ந்த தரனீஷ்(21) ஆகியோர் எனத்தெரிய வந்தது.

இவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாக பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், 2 கார்கள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment