/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1465.jpg)
திருச்சியில் சட்டவிரோதமாக ஐம்பொன் சிலை விற்பனை செய்யப்படுவதாக மதுரை சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் 8 பேர் கொண்ட குழு ஒன்று திருச்சிக்கு வருகை தந்து விசாரணை நடத்தியது. இதில் தனிப்படையினர் சிலை பதுக்கி வைத்திருப்பவர்களிடம், சிலை கடத்தல்காரர்கள்போல் பேசியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் சிலையை கொண்டுவந்தபோது, தயாராக இருந்த தனிப்படை போலீசார் மடக்கி பிடித்துவிசாரணை நடத்தினர்.
அதில் சிலையைப் பதுக்கி வைத்திருந்தவர் திருச்சியைச் சேர்ந்த முஸ்தபா என தெரியவந்ததையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். அத்துடன் இதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகராஜ்மற்றும் குமரவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டதோடு,சிலையை விற்க கொடுத்த திருப்பத்துறையைச்சேர்ந்த செல்வகுமார் என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பிறகு, போலீசார் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும்கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)