Advertisment

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கு; 4 பேர் கைது!

4 people arrested in recruitment case

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள்சேர்த்தவழக்கில் 4 பேர் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் கோவை உள்ளிட்டஇடங்களில் இருந்து4 பேரைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பாகதேசிய புலனாய்வு முகமை சார்பில்வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவைகார்குண்டுவெடிப்பு வழக்கின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு தீவிரவாதம் மற்றும்ஆட்சேர்ப்புவழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேலும் 4 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது, இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகமது அலி,ஜவஹர்சாதிக், ராஜாவில் ராஜா அப்துல்லா மற்றும்ஷேக்தாவூத்என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி (23.10.2022) அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்தகார்வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.கார்வெடித்த இடத்திலிருந்து ஆணிகள்,பால்ரஸ்குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்தஜமேசாமுபீன்என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

arrested car Coimbatore NIA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe