4 people arrested in Pocso after schoolgirl became pregnant

Advertisment

பதினோராம் வகுப்பு படிக்கும்பள்ளி மாணவி கர்ப்பிணியான சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தமாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு விரைந்த மாணவியின் தாய், அவரை செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர், மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவி மற்றும் அந்தப் பள்ளியில் படிக்கும் மற்றமாணவர்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வந்துள்ளன.

Advertisment

விசாரணையில், மாணவி 8 ஆம் வகுப்பு படிக்கும்போதுஒரு மாணவனைக் காதலித்ததாகவும், பிறகு வேறு ஒரு மாணவனைக் காதலித்ததாகவும், 11 ஆம் வகுப்பு படிக்க ஆரம்பிக்கும் போது சேரனூர் சிவகுமார் என்ற இளைஞரைக் காதலித்ததாகவும், அதையடுத்து சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவரைக் காதலித்ததாகவும், அவருக்கு அடுத்து சேரனூர் துரை என்று 5 பேரைக் காதலித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், மாணவி கர்ப்பமானதைத் தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.