/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/drowned.jpg)
திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ளது N.பாறைபட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களது ஊர் அருகே சந்தன வர்தினி ஆறு செல்கிறது. நேற்று (30.06.2021) மாலை ஆற்றில் துணி துவைப்பதற்காக சக்திவேல், அவரது மனைவி அர்ச்சனா, சக்திவேலின் அண்ணன் மகள் சத்தியாபாரதி (14) ஐஸ்வர்யா (11) ஆகியோர் சென்றுள்ளனர்.
சக்திவேலும் அர்ச்சனாவும் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது குழந்தைகள் இரண்டு பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு குழந்தைகள் சென்றதால் அவர்களைக் காப்பாற்ற கணவன் மனைவி இரண்டு பேரும் ஆற்றில் குதித்துள்ளனர். இதில் நீச்சல் தெரியாத நான்கு பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ஊர்கார்கள் ஆற்றில் குதித்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பாறைபட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)