நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 4 பேர் பலி, 80 பேர் படுகாயம்!  

4 passed away in Cuddalore collision between two private buses

கடலூர் - விழுப்புரம் செல்லும் சாலையில்நெல்லிக்குப்பம்அடுத்து உள்ள பட்டாம்பாக்கம் பகுதியில், நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த இரு தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்துகளிலும் பயணம் செய்த சுமார் 80 பேர் கடலூர் அரசுமருத்துவமனைக்குச்சிகிச்சைக்குக்கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

விபத்து குறித்து தகவலின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்மாவட்ட கண்காணிப்பாளர்ராஜராம்ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்துமீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்த விபத்து கடலூர்மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அறிவித்துள்ளார்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe