தடுப்பணை உடைந்த சம்பவத்தில் 4 அதிகாரிகளைபொதுப்பணித்துறை அதிகாரிகள்சஸ்பெண்ட் செய்துள்ளது.
விழுப்புரம்தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைஉடைந்தவிவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திரியமங்கலம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறிய நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஒழுங்கு நடவடிக்கை விதியின்கீழ் தலைமைப் பொறியாளர் அசோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி பொறியாளர் சுமதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.