Advertisment

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் மேலும் 4 பேர் கைது

ரர

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகி ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கிருத்திகா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Advertisment

அதன்பின்னர், அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வளைத்தளங்களில் தவறாக பதிவிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment
riot
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe