“என் சாவுக்கு மாமனார் தான் காரணம்” - ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு 4 மாத கர்ப்பிணி தற்கொலை

A 4-month pregnant woman committed with the status

சாத்தூர் அருகே மாமனார், மாமியார் கொடுமையால் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் வைத்து விட்டு கர்ப்பிணி பெண்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் உத்தண்ட காளை. 30 வயதான இவர் பேக்கரி மாஸ்டராக உள்ளார். இவருக்குத்திருமணமாகி இரண்டுகுழந்தைகள் உள்ள நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2 வருடங்களுக்கு முன் வர்ஷினி என்ற பெண்ணை இரண்டாவதாகத்திருமணம் செய்து கொண்டார்.

தம்பதி பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில் ஒரு வயதில் குழந்தை உள்ளது. மேலும்,வர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவருக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குடும்பத்திற்கு தெரியவர, மாமனார் அதை மீண்டும் மீண்டும் கூறி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வர்ஷினி தனது வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் மாமனார், மாமியார் கொடுமைப்படுத்துவதால் தற்கொலை செய்து கொள்வதாக வைத்துவிட்டு தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது மனைவியின் ஸ்டேடஸை பார்த்தகணவர் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். உள்ளே வர்ஷினி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

police sathur
இதையும் படியுங்கள்
Subscribe