Skip to main content

திருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு பலி!

 

fggh

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், இன்று 4 மாத பெண் குழந்தை கரோனா தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்