சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

4 members of the same family died in a road accident!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஜார்ஜ் - அருணா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜார்ஜ் அருணா மற்றும் குழந்தைகள் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நல்லாம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ், அவரது மனைவி அருணா இரு குழந்தைகள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.

பின்னர், உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியானது திண்டுக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

accident dindugal
இதையும் படியுங்கள்
Subscribe