Advertisment

பூணூல் அறுப்பு விவகாரம்: 4 பேர் காவல்நிலையத்தில் சரண்!

dk

சென்னை திருவல்லிக்கேணியில் 4 பேரின் பூணூலை அறுத்ததாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Advertisment

பெரியார் சிலையை உடைப்போம் என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து பல இடங்களில் கண்டன போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் பூணூலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அறுத்துச் சென்றதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

அதனடிப்படையில் அங்கு விரைந்த ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விவரங்களைச் சேகரித்தனர். இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

H Raja periyar statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe