Published on 13/07/2021 | Edited on 13/07/2021

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ். முனியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், கே. அருள்மதி, ஏ. ராஜ் மரியசூசை ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவியேற்கும் நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் இந்த பதவியில் அவர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.