4 killed in car accident; Bustle near Kovalam

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது.

Advertisment

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரானது கோவளம் அடுத்துள்ள செம்மஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது காரானது அதிவேகமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

தகவலறிந்து கேளம்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து மீட்புப் படையினர் நான்கு பேரின் உடல்களையும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீட்டனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காலை வேளையில் கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.