Advertisment

ஏ.டி.எம். இயந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி 4 லட்சம் கொள்ளை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

ழMன

அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூரில் நேற்று முன்தினம் (16.09.2021) இரவு தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. காலையில் பணம் எடுக்கச் சென்ற பொதுமக்கள் ஏடிஎம் மையத்தில் இயந்திரம் துண்டுத் துண்டாக உடைக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கு சிசிடிவி கேமரா உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். சம்பவத்தின்போது ஏடிஎம் இயந்திரத்தில் 4 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எளிதில் உடைக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் எப்படி உடைத்தார்கள் என்று காவல்துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள். ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இந்தக் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

arakkonam Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe