தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அதேபோல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் திரும்ப 17,719 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்காக மொத்தமாக 34,259 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளியைக் கொண்டாட சென்னையிலிருந்து மட்டும் இதுவரை 4,08,049 பேர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12 மணி வரை மொத்தம் 9,472 பேருந்துகளில் மக்கள் பயணம் செய்துள்ளனர். சொந்த ஊர் சொல்ல ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 315 பேர் முன்பதிவு செய்துள்ளனர் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.