/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trutru_0.jpg)
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல்நடத்தை விதிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 16.5 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது.
துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை ஈவ்னிங் பஜார் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அச்சமயம் ஒரு காரில் சோதனை நடத்தியபோது, 16.5 கிலோ வெள்ளிக் கட்டிகள், 4 லட்சம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக்கைப்பற்றியபறக்கும் படை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது, எந்த ஒரு ஆவணமும் இன்றி அவை எடுத்துச் செல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தவெள்ளிக்கட்டிகளும், 4 லட்சம் ரூபாய் பணமும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அந்த வெள்ளிக்கட்டிகளையும், பணத்தையும் கொண்டு வந்த வேலூரைச் சேர்ந்த விநாயகம் என்பவரிடம் நடத்திய விசாரணையில்,அவர் வேலூரில் நகைக்கடை வைத்திருப்பதாகவும், வெள்ளிக் கட்டிகளைக் கொடுத்துநகைகள் செய்வதற்குப் பூக்கடைபகுதிக்கு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்து. ஆனால் ஆவணங்கள் இன்றி கொண்டுவந்ததால் அவைபறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)