Advertisment

குழந்தையை மீட்க 4 மணி நேரமாக தொடர்ந்து போராட்டம்.... மீட்புப்பணி தீவிரம்!

திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில்தவறி விழுந்து உள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன்தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.

Advertisment

 4 hours of continuous struggle to rescue baby

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியில்உட்கார்ந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தைகள் நன்றக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த ஆழ்துளைக்கிணறு வைத்துள்ள தனியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 4 மணி நேரமாக நீடித்துள்ளது. குழந்தை மீட்கப்பட்டு உடனே முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அத்தனை மருத்துவ உபகரணங்களும் அங்கு கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.தற்போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை கையில் கயிறு கட்டி வெளியே மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 4 hours of continuous struggle to rescue baby

மதுரையில் இருந்து மணிகண்டன், நாமக்கல்லில் இருந்து டேனியில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். மதுரையை சேர்ந்தமணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த சிறப்பு குழந்தைமீட்புகருவி மூலம் குழந்தையைமீட்கும் பணியில்தீயணைப்பு துறையினர் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதுரை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞரின் மூன்று வயது குழந்தை இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறில்சிக்கிக் கொண்ட நிலையில் அந்த குழந்தை மீட்கப்பட்டது. அதனை அடுத்து இதுபோன்றுஆழ்துளை கிணறுகளில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்காக ஒரு சிறப்பு கருவியை மணிகண்டனை கண்டுபிடித்து, இதுபோன்று ஏதேனும் விபத்துக்கள் நடக்கும் இடங்களில் குழந்தையை தனது சிறப்பு கருவி மூலம் மீட்கும் பணியைசெய்துவந்தார். இந்நிலையில்தற்போது அவர் ஆழ்துளை கிணற்றில்சிக்கிக் கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை சுஜித்தைகாப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Rescue child thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe