Advertisment

காவிரி ஆற்றில் முழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு

4 female students drowned in Cauvery river

Advertisment

குளித்தலை அருகே மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர்நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டியைச் சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளியில்6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15 மாணவிகள் திருச்சி தொட்டியத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கு பெறுவதற்காக வந்துள்ளனர். இன்று விளையாட்டு போட்டிகள் முடிவடைந்ததும், மாணவிகள் மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்த செல்லாண்டி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாததால் ஒரு மாணவி நீரில் மூழ்கியுள்ளார்.அவரை காப்பற்ற முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து 3 மாணவிகள் நீரில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

students pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe