Published on 17/01/2021 | Edited on 17/01/2021

ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டுள்ளனர். இவர்கள் முறையே தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களாக பொறுப்பில் இருந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ.ஜே ஸ்டாலினின் சென்னை முகவரியில்தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது. மாவட்ட செயலாளர்கள் விலகிய இந்த செய்தி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.