Advertisment

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

jkl

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து வருகிறது. கரோனா பெருந்தொற்றை கணக்கில் கொண்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களாக கரோனோ கட்டுப்பாடுகளுடன் கூடிய அரங்க கூட்டங்களை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. மேலும், பிரச்சார நேரத்தையும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உயர்த்தியது.

Advertisment

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் இன்று மாலையோடு அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றும் முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கிறது. மேலும் தேர்தல் முடிவு வெளியாகும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கிறது. இதற்கான உத்தரவை தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe