Advertisment

ராமஜெயம் வழக்கு; 3வது நாளாக தொடரும் உண்மையைக் கண்டறியும் சோதனை 

3th day knramajayam case fact finding tests

திமுகஅமைச்சர் கே.என். நேருவின் தம்பியானதிருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம்கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைப்பயிற்சி மேற்கொண்ட போதுஅடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

இந்தக் கொலை வழக்கு குறித்து தற்போதுஎஸ்.பி. ஜெயகுமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல்துறையினர் இந்தக் கொலை வழக்கு தொடர்பாகசந்தேகத்திற்குரிய மற்றும் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜே.எம்-6 நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு செய்தனர். இதில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தநீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து 12 பேரிடம் உண்மையைக் கண்டறியும் பரிசோதனை கடந்த 2 தினங்களுக்கு முன் தொடங்கியநிலையில், 3வது நாளானஇன்றும் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. சாமி ரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 4 பேரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

police ramajayam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe