ADVERTISEMENT

 3-வது நீதிபதி எஸ்.விமலா

02:24 AM Jun 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

நீதிபதி எஸ்.விமலா, கடந்த 1957-ல் சிதம்பரத்தை அடுத்த வீராணநல்லூர் கிராமத்தில் பிறந்தவர். பரங்கிப்பேட்டையில் அரசு உதவி பெரும் பள்ளி விடுதியில் தங்கி படித்தவர். இதன் பிறகு பட்டப்படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற்றவர். 1983-ல் கடலூர் மற்றும் சிதம்பரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கடந்த 2002-ல் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் விமலா. 2010 பிப்ரவரி 16ஆம் தேதி விமலா சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2013-ல் நிரந்தர நீதிபதியானார். இலக்கியவாதியான இவர் பெண்கள் முன்னேற்றத்தில் ஆர்வமும், அக்கறையும் செலுத்தியவர்.

சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள 63 நீதிபதிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் 15 வது இடத்தில் இருக்கிறார். இவரது கனவர் வேல்முருகன் சிதம்பரத்தில் வழக்கறிஞராக பணியாற்றிகொண்டு தமிழ்மாநில காங் கட்சியின் மாநில இணை செயலாளராக உள்ளார். மகன் விவேக் சினிமாவில் பாடல் ஆசிரியராக இருக்கிறார். நீதிபதி விமலாவின் மருமகள் சாரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.

எனவே இவர் எழுதும் தீர்ப்பில் தான் எடப்பாடி ஆட்சியின் தலையெழுத்து உள்ளது. எளிய நிலையில் இருந்து திறமையின் அடிப்படையில் உயர்ந்தவர். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவரது தீர்ப்பீன் மூலம் தமிழகத்தின் நீதியை நிலைநாட்டுவார். என அவரை நன்கு அறிந்த கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். மேலும் இவர் வரும் 2019 ஜனவரி மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில் அதற்குள் வழக்கின் விசாரணை முடித்து தீர்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். இன்னும் 6 மாதத்தில் எடப்பாடி ஆட்சியின் தலையெழுத்து நிர்ணயிக்கபடும் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT