Advertisment

39 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தார்ச் சாலை தரமில்லை; இளைஞர் - கவுன்சிலர் வாக்குவாதம் 

39 lakhs, the asphalt road laid is not of good quality

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டியில் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 39 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் அளவிலான தார்ச் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்ச் சாலை 25 இன்ச் அளவில் போடப்பட வேண்டும் ஆனால் இந்த தார்ச்சாலை 10 இன்சுக்கும் குறைவாக போடப்பட்டுள்ளது. இந்த தார்ச்சலையை இந்து அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தங்களுடைய கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்றுஉள்ளதாக குற்றம் சாட்டினர். இந்த தார்ச் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்தும் வீசி எறிந்தனர்.

Advertisment

அப்போது திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடமும் பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒரு மணி நேரம் தங்களுக்கு தாருங்கள் ஒரு கிலோ மீட்டர் அளவில் போடப்பட்ட தார்ச் சாலையை கைகளால்நோண்டி எடுத்து விடுகிறோம் எனவும் ஆதங்கமாக பேசினர்.

Advertisment

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பானது. தரம் இல்லாதசாலையை போட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Road thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe