தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட காய்ச்சல் பரவல்கள் அதிகமாகி இருந்தது. அதன் காரணமாக தமிழக அரசு சார்பாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. தற்போது வரை அரசு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சலுக்கு 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.