
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, “கைத்தறித்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பால் உற்பத்தியாளர் மற்றும் பால் பண்ணை மேம்பாடு ஆணையரகத்தின் ஆணையராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநராக வினித் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக ஆணையராக ஆபிரகாம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக கிரன் குராலா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநராக அல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக அன்சூல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பவன் குமார் கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக ஷஜிவனா நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலராக நாராயண சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக சங்கத் பல்வந்த் வாகே நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலராக பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகத்தின் ஆணையராக ஹர் சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை அரசு செயலாளராக சமய மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசு முதன்மைச் செயலாளராக சத்ய பிரத சாகு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தின் ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.