court

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருச்சி மங்கள் அன்ட் மங்கள் நகைக்கடை ஊழியர்கள் சென்னையில் தங்க நகைகளை வாங்குவதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரூ.3.72 கோடி பணத்துடன் வேனில் சென்றனர்.

அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் பாலத்தை வேன் நெருங்கியபோது போலீஸ் உடையில் இருந்த 11 பேர் கொண்ட கும்பல் அந்த வாகனத்தை வழிமறித்தது. வாகனத்தை சோதனையிடுவது போல நடித்து நகைக்கடை ஊழியர்களை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றது.

Advertisment

இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தியதில் வழக்கறிஞர் பாண்டியன் தலைமையில் தவசி , இருளாண்டி, கருப்பன், நொயல் உள்ளிட்ட 16 பேர் கொண்ட கும்பல் திருடியது தெரிய வந்தது. பின்னர் அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கானது விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு 7 ஆண்டு கால சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.

பின்னர் அவர்கள் அப்பீல் செய்ததால் வழக்கானது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன், சார்பு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு கால சிறை தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பு அளித்தார். மேலும் குற்றவாளிகள் 15 பேரும் ஒரு மாதத்திற்குள் சரணடைய வேண்டும் என்று கூறினார்.