திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சோமரசம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் இறங்கிய காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவலர்கள், அப்பகுதியில் உய்யகொண்டான் திருமலைப் பகுதியைச் சேர்ந்த அனந்தராம்(37), மற்றும் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பாண்டி என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சண்முகாநகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த வெவ்வேறு வகையான போதை பொருட்கள் மொத்தம் 347 கிலோ கைப்பற்றப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரூ. 2 இலட்சம் வரை இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.