Advertisment

ஊரடங்கு காலத்தில் 37 ஆயிரம் கோடி பரிவர்த்தனை! தபால் துறையின் சாதனை!!

37 thousand crore transactions during curfew - Postal Department Achievement

கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவையின்கீழ் தபால் துறை இயங்கி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் ஏடிஎம் கார்டு இல்லாதவர்கள், முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே பணத்தை பெற இந்திய போஸ்ட் பேமன்ட் வங்கி களமிறங்கியது.

Advertisment

அதன்படி தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரரிடம் வாடிக்கையாளர்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் கொடுத்தால் பணம் தரப்படும். இவ்வாறு 23 லட்சம் பேருக்கு 452 கோடி வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டம், கல்வி உதவித்தொகை, காஸ் மானியம் உட்பட அரசின் பல்வேறு மாநிலங்களை நேரடியாகப் பெறும் சட்டத்தில் 74.6 லட்சம் பேருக்கு 700 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. தபால் துறையின் சேமிப்புத் திட்ட திட்டங்களின் கீழ் 2.30 கோடி பேருக்கு 33 ஆயிரம் கோடி இந்திய போஸ்ட் பேமன்ட் வங்கி மூலம் ஒரு கோடி பேருக்கு 2,600 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

மணி ஆர்டர்கள் உள்ளிட்டவை மூலம் 74 லட்சம் பேருக்கு 355 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், "வழக்கமாக 10 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவேபண பரிவர்த்தனை இருக்கும். ஊரடங்கு துவங்கிய மார்ச் 24 முதல் ஏப்ரல் 25 வரை 37 ஆயிரத்து 107 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது" என்றனர்.

post lockdown corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe