Advertisment

நாங்குநோியில் 37 போ் வேட்புமனுக்கள் இன்று பாிசீலனை

நாங்குநோி தொகுதி இடைத்தோ்தல் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், அதிமுக நாராயணன், நாம் தமிழா் ராஜநாராயணன் உட்பட 37 போ் 46 மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

Advertisment

today 37 nominations are Review in Nanguneri

இதில் நிறைவு நாளான நேற்று மட்டும் 28 போ் மனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் ரூபி மனோகரனுக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மகன் அசோக்கும் அதிமுக நாராயணனுக்கு மாற்று வேட்பாளராக பெருமாளும் மனு தாக்கல் செய்துள்ளனா். இது தவிர மது குடிப்போா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் செல்லபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். இதில் நாங்குநோியில் மதுகுடிப்போா்கள் எனக்கு ஓட்டு போட்டாலே நான் ஜெயித்து விடுவேன் என செலலப்பாண்டியன் கூறியுள்ளாா்.

Advertisment

வேட்பாளா்கள் தாக்கல் செய்த மனுக்கள் பாிசீலனை இ்ன்று நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறு நாள் கடைசி நாளாகும். அன்றுதான் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

elections byelection nanguneri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe