/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nellai (1)_0.jpeg)
நெல்லை டவுணில் உள்ளது ஜவஹர் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி. இந்தப் பள்ளி மரத்தில் நீண்ட நாட்களாக இருந்த தேன்கூடு இன்று காலை காற்றில் கலைந்ததால், தேனீக்கள் வெளியேறி பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொட்டியது. இதில் 31 மாணக்கர்களும், 5 ஆசிரியர்களும் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த மாணக்கர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nellai (2)_0.jpeg)
இதைத்தொடர்ந்து, நிரந்தரமாக தேன்கூட்டை அகற்ற நினைத்த மாவட்ட நிர்வாகமோ, "ஜவஹர் பள்ளிக்கும், அதனருகிலுள்ள கல்லணைப் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும்." இன்று ஒரு நாள் விடுமுறை அளித்ததோடு மட்டுமில்லாமல் தீயணைப்புத்துறையினரைக் கொண்டுதேன்கூட்டை அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.
Follow Us