Advertisment

கடலுக்குள் இருந்த மீனவர்கள் மீட்பு

f

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ராசக்கண்ணு (52) என்பவருக்குச் சொந்தமான INDTN08MO1810 என்ற பதிவு எண் கொண்ட பைபர் படகில் அதே ஊரைச்சேர்ந்த புரட்சிதாசன்(32), பரசுராம்(50), அசோக் (30) ஆகியோர் கடந்த 11.11.2018 07:00 மணிக்கு ஜெகதாப்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று 14.11.2018/18:00 மணிக்கு கரை திரும்ப வேண்டியவர்கள் இன்று 15 ந் தேதி வரை கரைதிரும்பாமல் இருந்த நிலையில் அவர்களின் உறவினர்கள் கஜாவில் சிக்கிக் கொள்வார்களோ என்று கதறத் தொடங்கினார்கள்.

Advertisment

இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்டம் மீன்வளத்துறை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழும காவல் உதவி ஆய்வாளர்கள் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் காணாமல் போன பைபர் படகை தேடி திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய 5 டன் அதிவிரைவு படகில் சென்று தேடிக்கொண்டிருந்த போது நடுக்கடலில் அந்த மீன்பிடி பைபர் படகு மற்றும் 3 மீனவர்களும் வந்து கொண்டிருந்தனர். படகு மற்றும் மீனவர்களையும் தேடிச் சென்ற அலுவலர்கள் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவந்தனர்.

Advertisment
fisherman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe