கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்க தயாராகிக்கொண்டு இருக்கிறது. வீடுகளில் சாதாரணமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு, ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
அப்படி வைக்கப்படும் சிலைகளுக்காக வசூல் வேட்டைகளும் நடத்தப்படுகிறது. நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும், பயணிகள் திரும்ப வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.