3.47 lakh people infected with coronavirus in Chennai in future

Advertisment

நேற்று சென்னையில் ஒரேநாளில் 1,156பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் நேற்றுஐந்தாம் நாளாகஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து தொடர்ந்த நிலையில், சென்னையில் இதுவரை 22,149 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படவாய்ப்புள்ள 3.47 லட்சம் பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்என அமைச்சர்கள் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள கரோனாகட்டுப்பாடு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகள் நடத்தவும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு பகுதிகளில் 100 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் ஏற்கனவே இருந்த நிலையில், அதை 200 ஆக உயர்த்த ஆலோசனை கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2 லட்சம் பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் ஹோமியோபதி மருந்து வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.