
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக செயல்பட்டு வந்த இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற்றார். அதனையொட்டி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தனது பொறுப்புகளை சிவ்தாஸ் மீனாவிடம் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பொதுத்துறைச் செயலராக பணியாற்றிய சிவ்தாஸ் மீனா 2021 ஆம் ஆண்டு நகராட்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறைச் செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சிவ்தாஸ் மீனா. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் இன்று பிரிவு உபசார விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. அவருக்கான கார் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைவரும் தலைமைச் செயலகத்தின் 6 எண் கேட் வரை சென்று அவரைவழியனுப்பி வைக்க உள்ளனர். 1990 ஆம் ஆண்டு பணியைத் துவங்கிய இறையன்பு, தனது 33 ஆண்டுகால பணியினை இன்றுடன் நிறைவு செய்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)