மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மூன்று பெண் குழந்தைகளுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கிட 30ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியில் உள்ள சேத்தனா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதோடு, மாற்றுச் சான்றிதழை தர மறுப்பதால் பள்ளி வளாகத்திலேயே குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisment

33 thousand for give TC... parents protest in front of school

இதுகுறித்து பத்திரிக்கையார்கள் பள்ளி நிர்வாகத்தில் கேட்டபோது, யாரிடமும் பதில் சொல்லதேவையில்லை யாரிடம் சொல்லனுமோ அவர்களிடம் சொல்லிவிட்டோம் என்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதனிடம் கேட்டோம் அவரும்அதற்கு பதில் அளிக்காமல்நேரடியாக வரவும் என்றார்.நாம் நேரடியாக போனபோது அங்கு சம்மந்தபட்ட சேத்தனா பள்ளியின் முதல்வரும், ஆசிரியரும் வந்து அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தனர்.

Advertisment

33 thousand for give TC... parents protest in front of school

அதிகாரியின் நேரடி உதவியாளர் நம்மை சந்திக்கவிடாமல் சார் இல்லை மாலை வாங்க என்று நம்மை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தற்போது போலிஸார் தர்ணாவில் ஈடுபட்டமாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதாக அவர்களின் உறவினர்கள் கூறினர். பள்ளி நிர்வாகத்தோடு மாவட்ட கல்வி அதிகாரியும் சேர்ந்து டி.சி.கொடுக்க மறுத்து வருவதொடு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாக இருக்கிறது என்னசெய்வதென்று தெரியவில்லை என்கின்றனர் அந்த பெற்றோர்.