Advertisment

'33 தீர்மானங்கள்; 24 வகை அசைவ உணவுகள்'-திமுக பொதுக்குழு அப்டேட்

dmk

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (01.06.2025) நடைபெற உள்ளது. இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று (31.05.2025) மதியம் மதுரைக்குச் சென்றடைந்தார். அதன்படி விமான நிலையத்திற்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு மற்றும் உட்பட பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

அதோடு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

Advertisment

இந்நிலையில்இன்று (01.06.2025) இன்னும் சற்று நேரத்தில் திமுக பொதுக்குழு தொடங்க உள்ள நிலையில் இந்த பொதுக்குழுவில் 33 தீர்மானங்கள் திமுக சார்பில் நிறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக நிதி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்துவஞ்சிப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அணி உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம்; ஆளுநரின் செயல்பாட்டுக்கு கடிதம் தெரிவித்து ஆளுநர் பதவியை நீக்க வலியுறுத்தி தீர்மானம்; துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தீர்மானம்; கட்சி அமைப்பு ரீதியாக முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல் சரியாக செயல்படாத நிர்வாகிகளுக்கு இக்கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்களை கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

nn

அதேபோல் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் நிர்வாகிகளுக்கு தடபுடலான அசைவு விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் கொத்துக்கறி, கோலா உருண்டை, மட்டன் வைட் குருமா, நாட்டுக்கோழி, மிளகுக் கறி, வஞ்சிரம் வறுவல், சிக்கன் 65, ஆம்லெட், மட்டன், பிரியாணி, எலும்பு குழம்பு, அயிரை மீன் குழம்புஎன 24க்கும் மேற்பட்ட அசைவ உணவுகளும், கதம்ப பொரியல், காரக்கறி, சைவ சிக்கன், சிப்பி காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கார குழம்பு, ஜிகர்தண்டா, பீடா, மலை வாழைப்பழம், வாழைப்பழம் என சைவ உணவுகளும் தயாராகி வருகிறது.

madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe