
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இன்ஸ்டா மூலம் பழகி பெண்ணிடம் 32 பவுன் நகை பறித்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் எத்திராஜ் என்பவர் வீட்டில் 32 பவுன் தங்க நகை காணாமல் போனதாக கூடங்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் எத்திராஜ் உடைய பத்தாம் வகுப்பு படித்தவரும் மகளிடம் போலீசார் விசாரணை நடத்திய பொழுது அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இரண்டு வாலிபர்கள் நகையைத் திருடி சென்றதாக தெரிவித்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த ஹாசிப், ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளமான இன்ஸ்டால் பக்கத்தின் மூலம் பழகி சிறுமியைக் குறிவைத்து வீட்டிற்கு சென்று 32 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.