மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பொன்முடி புறக்கணிக்கப்பட்டிருந்தார். இதனால், மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இந்நிலையில், பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே இருக்கும் திருவள்ளூர் சிலை முன்பு தமிழ் புலிகள்கள் கட்சியைச் சேர்ந்த பேரறிவாளன், பசும்பொன் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்டவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.