சேலத்திலிருந்து கேரளாவிற்கு காரில் கடத்தி செல்ல முயன்ற30 கிலோ சந்தன கட்டைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisment

கோவை கொடீசியா அருகே காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிடும் போது காரில் 30 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

Advertisment

police

அப்போது இது தொடர்பாகபோலீஸார் விசாரணை செய்து கொண்டிருந்த போது காரில் இருந்த இருவர்கள்தப்பியோடினர். ஆனால் காரில் இருந்த மூன்றாவது நபரான காசி என்ற நபர் மட்டும் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார். அவரைக் கைது செய்த பீளமேடு காவல்துறையினர் அவரைக் பிடித்து விசாரணை செய்தனர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து கேரளாவிற்கு சந்தனகட்டைகளைக் வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது.

பின்னர் சந்தனகட்டைகளைக் கோவை வனத்துறையிடம் போலீஸார் ஒப்படைத்து, இதில் தப்பிச்சென்றஇருவரைக் தேடி வருகின்றனர்.

Advertisment